2012 ஆம் ஆண்டு முல்லைத்தீவு வல்லிப்புனம், புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ கோப்ரல் அதே முகாமில் கடமையாற்றிய கணிஷ்ட அதிகாரியை கொலை செய்தமைக்காக இராணுவ கோப்ரலுக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் 10 ஆண்டு கடும் கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு முல்லைத்தீவு முகாமில் கடமையாற்றிய இராணுவ கோப்ரல் தனக்கு விடுமுறை வழங்கவில்லை என்பதற்காக வாய் தாக்கம் ஏற்பட்டு கடும் சண்டை ஏற்பட்டதால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் விசாரணையின் போது எதிராளி தனது சாட்சியத்தில் பதிவு செய்துள்ளார்.
இதன் போது எதிராளிக்கு வழங்கப்பட்ட தண்டனையானது எதிராளி கொலை செய்யும் நோக்கத்துடன் செயல்படவில்லை திடீர் சண்டை கோபம் காரணமாகவே இந்த குற்ற செயலை இடம்பெற்றதாக தீர்ப்பளித்தார் நீதிபதி இளஞ்செழியன்.
எனவே குற்றவாளி என தீர்ப்பளித்து 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 10000 ரூபா தண்டபாணமும் விதிக்கப்பட்டது இந்த தண்டப்பணத்தை கட்ட தவறும் பட்சத்தில் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து விற்பனைத்துள்ளார்



