கல்ஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த உதயாதேவி புகையிரதம் கந்தளே அக்போபுர பிரதேசத்தில் தடம் புரண்டதில் இரண்டு புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் உட்பட 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்கு மூன்று ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.
கட்டுப்பாட்டாளர் பெட்டி கவிழ்ந்ததில் கட்டுப்பாட்டாளர் மற்றும் உதவிக் கட்டுப்பாட்டாளர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்திகள்



