40 பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது

tamillk.com
 

QR குறியீட்டை மீறி தொடர்ச்சியாக எரிபொருள் விற்பனை செய்யும் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


அமைச்சர் டுவிட்டரில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.




இன்று (ஏப்ரல் 6) காலை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரசபை மற்றும் களஞ்சிய முனையத்தின் அதிகாரிகளுடன் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


அடுத்த 8 வாரங்களுக்கான எரிபொருள் இறக்குமதித் திட்டம், சுத்திகரிப்புச் செயற்பாடுகள் மற்றும் பண்டிகைக் காலத்தில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகம் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டது.


இதேவேளை, நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து டேங்கர்களுக்கும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணிகள் ஏப்ரல் 15ம் தேதிக்குள் நிறைவடையும், எதிர்காலத்தில் தனியார் டேங்கர்களுக்கும் இது செயல்படுத்தப்படும் என காஞ்சனா விஜேசேகரவின் டுவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்