நெடுந்தீவு கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

tamillk.com


(jaffna tamil news) நெடுந்தீவில் ஐந்து நபர்களை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபருக்கு எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிவான் ஜே. கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை நெடுந்தீவில் ஐந்து நபர்களை கொலை செய்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபரை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊர்காவல்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய போது சந்தேக நபரை மேலும் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு 48 மணி நேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி கூறியுள்ளனர்.

இதன்படி சந்தேக நபருடன் கொலை நடந்த இடத்திற்கு சென்று விசாரணைகளை முற்படுத்திய போது அவர் கொலை சம்பவத்திற்காக பயன்படுத்திய கத்தி மற்றும் அவர் அணிந்திருந்த சரம் ஆகியவற்றை கிணற்றிலிருந்து மீட்டெடுத்தனர்.

விசாரணைக்கு உட்படுத்திய சந்தேக நபருக்கு பெற்றுக் கொண்ட 48 மணித்தியாலம் நேரம் முடிவடைந்ததும் சந்தேக நபரை இன்றைய தினம் ஊர்க்காவல்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.

இதை அடுத்து சந்தேகம் நபருக்கு எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்