உலகின் நெருக்கடிக்கான தீர்வு புத்தரிடம் உள்ளது:பிரதமர் நரேந்திர மோடி

 


புத்தருக்கு வெளிப்பாட்டிற்கு அப்பாற்பட்ட உணர்வு இருப்பதாகவும், அவரது போதனைகள் நிகழ்காலத்திற்கு மிகவும் பொருத்தமானவை என்றும் இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார்.


உலகளாவிய பௌத்த மாநாட்டில் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டமை மனித குலத்தை ஒற்றை இழையால் பிணைக்கும் புத்தரின் தர்மத்தைப் பிரதிபலிப்பதாகக் கூறிய பிரதமர், புத்தரின் பண்டைய போதனைகள் மூலம் நவீன யுகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுவதாகவும் தெரிவித்தார்.


புத்தபெருமானின் போதனைகளை பரப்புவதற்கும், இந்தியாவிலும் நேபாளத்திலும் பௌத்த சூழலை மேம்படுத்துவதற்கும், சரநாத் மற்றும் குஷிநகரை புதுப்பிப்பதற்கும், குஷிநகர் சர்வதேச விமான நிலையம் மற்றும் லும்பினியில் இந்திய சர்வதேச புத்த பாரம்பரியம் மற்றும் கலாச்சார மையங்களை உருவாக்குவதற்கும் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.


புதுடெல்லியில் நடைபெற்று வரும் உலக பௌத்த மாநாட்டின் தொடக்க உரையை நிகழ்த்திய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதனைத் தெரிவித்தார்.


சர்வதேச பௌத்த சம்மேளனத்துடன் இணைந்து இந்திய அரசாங்கம் இந்த இரண்டு நாள் பயிலரங்கை ஏற்பாடு செய்துள்ளது.


இந்த மாநாடு பௌத்த மதத் தலைமைகள் மற்றும் பௌத்தர்களின் தேவைகள் மற்றும் அவற்றை கூட்டாக நிவர்த்தி செய்வதற்கான கொள்கை உள்ளீடுகளை முன்வைக்கும் முயற்சியாகும்.இந்த மாநாட்டில் இலங்கை மதகுருமார்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற அறிஞர்கள், பௌத்த தலைவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர். .

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்