தனுஷ்க குணதிலக்கவுக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடைவிதித்து உத்தரவு

 


பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அந்த வழக்கு இன்று (07) டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சிட்னி ரோஸ் பே, சிட்னிக்கு கிழக்கே சிட்னியில் வசிக்கும் 29 வயது யுவதியொருவர் செய்த முறைப்பாட்டின் பேரில் இலங்கை கிரிக்கெட் அணி தங்கியிருந்த ஹோட்டலில் வைத்து தனுஷ்க குணதிலக்க சிட்னி பொலிஸாரால் நவம்பர் 6ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு ஏப்ரல் 27ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்