இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளால் தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வு தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை சாதகமான முறையில் அணுக எதிர்பார்த்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாத்திரமின்றி இனிய மாகாணங்களுக்கும் சில அதிகாரங்களை வழங்குமாறும் அவர்களால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை தொடர்பான பேச்சுவார்த்தைகள் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் முன்னெடுக்கப்படும். என சர்வதேச ஊடகமொன்றுக்கு நேற்றைய தினம் வழங்கிய நேர்காணலில் அவர் கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில்"இலங்கையில் இருக்கும் மக்களின் பல வகையான தமிழர்கள் வசிக்கிறார்கள். வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர்கள். மற்றும் இந்தியா வம்சாவளி மலையாக தமிழர்கள் என அவர்களை வகைப்படுத்தலாம். மற்றும் தற்போது தமிழர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை நாம் நிவர்த்தி செய்து வருகின்றோம்.
உலகில் எந்த நாடுகளிலும் நடைபெறாத ஒரு விடயம் இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. அங்கு வாழும் சிங்களவர்களின் சனத்தொகை குறைவடைந்து தமிழர்களின் சனத்தொகை அதிகரித்துள்ளது.
இருந்த போதிலும் குறித்த பகுதிகளில் உள்ள தமிழர்களின் பொருளாதாரம் மற்றும் சமூக தரங்களை நாம் மேம்படுத்த வேண்டும்.
இலங்கையில் இருக்கும் அரசியல் அமைப்பில் உள்ள அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்துமாறு தமிழ் அரசியல்வாதிகள் கோரியுள்ளனர். அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இதில் மத்திய அரசாங்கம் தலையிடாது. இதற்கான உத்தரவாதத்தை எம்மால் வழங்க முடியும்.
மாகாணங்களுக்கான அதிகாரங்கள்
ஒன்பது மாகாணங்களுக்கான சட்டத்தை கொண்டு வருவதற்கு ஆயுதங்களை நாம் செய்துள்ளோம். இதனை தவிர்த்து வேறு சில அதிகாரங்களையும் தமிழ் அரசியல்வாதிகளால் எம்மிடம் கோரியுள்ளனர்.
இந்த கோரிக்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மாத்திரமின்றி இலங்கையில் உள்ள ஏனைய 9 மாகாணங்களுக்கும் உள்ளடக்கியதாக நடைமுறைப்படுத்தப்படும்"என அவர் கூறியுள்ளார்.



