இலங்கைக்கு 7 மாதங்களில் 7 லட்சம் சுற்றுலா பயணிகள்

 



இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் 20 ஆம் திகதி வரை 714,598 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


கடந்த வருடம் (2022) இலங்கைக்கு வந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 719,978 எனவும் தற்போதைய சுற்றுலாப் பயணிகளின் வருகையின் படி இவ்வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.



இம்மாதம் கடந்த 20 நாட்களில் 89,724 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்