பொறுப்பற்ற ஓட்டுநர் மேலும் இரு உயிர்களைக் கொன்றார்

 

tamillk-news

திஸ்ஸமஹாராம - கதிர்காமம் பிரதான வீதி 6, கனுவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளதுடன், அவர்களது 15 வயது மகன் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



வேனை ஓட்டிச் சென்ற சாரதி அதிக குடிபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படுவதாகவும், அவர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.



இது கதிர்காம பூஜைக்காக கிரிந்தேயிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வேன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


யதலதிஸ்ஸ ஆசிரியர் சங்கம் வாட்ஸ்அப் செய்தி ஊடாக கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்