அக்குரஸ்ஸ, அமலகொட பிரதேசத்தில் மரம் ஒன்று விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இன்று (ஜூலை 22) காலை, அமலகொட சந்தி பகுதியில் உள்ள கேரேஜ் ஒன்றிற்கு அருகாமையில் வீசிய பலத்த காற்றினால் அழுகிய மரம் முறிந்து விழுந்துள்ளது.
இதன்போது கராஜில் இருந்த 5 பேர் நசுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், ஏனைய நால்வர் படுகாயமடைந்த நிலையில் மேலும் மூவர் அக்குரஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
அக்குரஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் 65 மற்றும் 28 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த ஏனைய மூவரும் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Tags:
srilanka



