கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பஸ் ஒன்றும் துல்ஹிரிய பிரதேசத்தில் ஃபைம் மூர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இன்று காலை 10:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், சீமெந்து ஏற்றப்பட்ட பிரைம் மூவரில் மோதி பஸ் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ் சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Tags:
srilanka



