வவுனியாவில் 8 வயது சிறுவன் துஸ்பிரயோகம் : 15 வயது சிறுவன் கைது vavuniya news-Tamillk news

 வவுனியாவில் 8 வயது சிறுவன் ஒருவனை துஸ்பிரயோகம் செய்ததாக 15 வயது சிறுவன் ஒருவர் வவுனியா பொலிசாரால் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

tamillk news-vavuniya


பாடசாலை முடிவடைந்து மேலதிக வகுப்புக்காக வவுனியா, வெளிக்குளம் பகுதிக்கு சென்ற 8 வயது சிறுவன் ஒருவனை அப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து நேற்று (27) மாலை 15 வயது சிறுவன் ஒருவன் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.


இதன் பின், 8 வயது சிறுவன் வீடு சென்ற பின் தனக்கு நடந்த சம்பவத்தை வீட்டிற்கு தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த சிறுவன் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இது தொடர்பில் வைத்தியசாலை பொலிசாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து 15 வயது சிறுவன் வவுனியா பொலிசாரால் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.



மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த வவுனியா பொலிசார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். 

vavuniya tamil news

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்