இலங்கையின் மிகவும் மதிப்புக்குரிய வங்கியாக கொமர்ஷல் வங்கி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு 2023ல் ஒட்டுமொத்த கூட்டாண்மை நிறுவனங்களில் இலங்கையில் மிகவும் மதிப்புக்குரிய நான்காவது நிறுவனம் என்ற இடத்தையும் அது பிடித்துள்ளது. LMD சஞ்சிகையினாலேயே இந்த நிலைப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் மிகப் பெரிய தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கி சகல பிரிவுகளின் கீழ் நிதிச் செயற்பாடு வர்த்தகத் துறை மற்றும் நேர்மை என்ற பிரிவில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக தூரநோக்கு முகாமைத்துவ சுயவிவரம் தேசிய முன்னோக்கு மற்றும் கூட்டாண்மை கலாசாரம் என்பனவற்றில் இலங்கையின் முன்னணி ஐந்து கூட்டாண்மை நிறுவனங்களில் ஒன்றாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் மிகவும் மதிப்புக்குரிய வங்கி என்ற விருதை கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது இது 19வது தடவையாகும். அத்தோடு 2005ல் LMD இன் இந்த தரப்படுத்தல் முறை ஆரம்பிக்கப்பட்டது முதல் அதன் வருடாந்த மதிப்பீட்டில் கொமர்ஷல் வங்கி ஒவ்வொரு வருடமும் மிகவும் மதிப்புக்குரிய ஐந்து நிறுவனங்களில் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டு வந்துள்ளது. 2023ல் கொமர்ஷல் வங்கி இந்த வரிசையில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.
வங்கிக்கு கிடைத்துள்ள இந்த கீர்த்திகள் பற்றி கருத்து வெளியிட்ட வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க 'கூட்டாண்மை வெற்றிக்கு மதிப்பு என்பது ஒரு மத்திய ஒரு விடயமாகும். நிதி சேவைத் துறையில் நேர்மைக்கான கீர்த்தி நாமமும் திடமான நிதிச் செயற்பாடும் தவிர்க்க முடியாத அம்சங்களாகும். இந்தப் பிரிவுகளின தரப்படுத்தலில் பொது மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் அதி உயர் நிலையை அடைந்து கொள்வதும் தொடர்ந்து 19வது தடவையாக மிகச் சிறந்த மதிப்புக்குரிய வங்கி என்ற நிலையை அடைவதும் உண்மையிலேயே குறிப்பிடத்தக்க சாதனையாகும்' என்றார்.
இலங்கையின் முதல் 100% கார்பன் பாவனையினை குறைத்த வங்கி உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட வங்கி கொமர்ஷல் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி 250 கிளைகள் மற்றும் 950 தானியங்கி இயந்திரங்களை வலையமைப்பினைக் கொண்ட இயங்குகின்றது. கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைக்கு பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை உள்ளடக்கியது அங்கு வங்கி 20 கிளைகளை இயக்குகின்றது: மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி நிறுவனத்தினை கொண்டுள்ளது.



