கடும் வறட்சியான காலநிலையினாலும், விவசாய நடவடிக்கைகளினாலும் கிளநொச்சியில் கறவை மாடுகளுக்கு புல் கிடைக்காமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளனொச்சியின் பால் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கறவை மாடுகளுக்கு புல் சாப்பிடுவதற்கு அரசு அல்லது தனியார் துறையினர் தலையிட்டு இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரியும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
கிளிநொச்சி, கொனாவில் பிரதேசத்தில் வசிக்கும் பல பால் பண்ணையாளர்களால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களின் கறவை மாடுகள் அருகிலுள்ள வயல்வெளிக்கு கொண்டு வரப்பட்டன.
Tags:
kilinochchi



