நாட்டின் உள்ள தமிழ்த் தலைவர்களுடன் நாம் ஒன்றிணைந்து பயணிக்கவே விரும்புகின்றோம். அவர்களும் மக்களின் நலன் கருதி அதனைக் கருத்தில் கொண்டு செயற்படுவார்கள் என்று எண்ணுகின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதியால் மாத்திரம் அரசியல் தீர்வை வழங்க முடியாது எனவும். அவரால் யோசனைகளை மாத்திரம் முன்வைக்க முடியும்.
இறுதி முடிவு
சர்வ கட்சிகளைக் கொண்ட நாடாளுமன்றம் மட்டும் தான் அரசியல் தீர்வு தொடர்பில் இறுதி முடிவு எடுக்க முடியும். இது தொடர்பாக சம்பந்தனுக்குத் தெரியும்.
அவர் கூறும் வெளியக சுயநிர்ணய உரிமை என்னவென்று எனக்குப் புரியவில்லை.
இறுதியாக நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்திலும் சம்பந்தன் தீர்வு தொடர்பான தமது நிலைப்பாட்டை எடுத்துரைத்துள்ளார். அது தொடர்பில் நான் கவனம் செலுத்துவேன்.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் தொடரும். அது தொடர்பில் நாடாளுமன்றம் முடிவுகளை எடுக்கும் என என்றார்.



