மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதி அணிகள் தெரிவு

 

tamillk news



2023 மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிகளுக்கு, ஸ்பெய்ன், சுவீடன், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகியன அணிகள் தெரிவாகியுள்ளன.


நேற்று நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை 2-1 கோல்கள் விகிதத்தில் ஸ்பெய்ன் வென்றது. மற்றொரு போட்டியில்  ஜப்பானை 2-1 விகிதத்தில் சுவீடன் வென்றது.




இன்று நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் பிரான்ஸை, இணை வரவேற்பு நாடான அவுஸ்திரேலியா பெனால்டி முறையில் 7-6 கோல்கள் விகிதத்தில் வென்றது. இன்று நடைபெற்ற 2 ஆவது கால் இறுதிப்போட்டியில் கொலம்பியாவை இங்கிலாந்து 2-1 விகிதத்தில் வென்றது.


எதிர்வரும் 15 ஆம் திகதி நியூஸிலாந்தின் ஆக்லாந்தில் நடைபெறவுள்ள அரை இறுதிப்போட்டியில் ஸ்பெய்னும் சுவீடனும் மோதவுள்ளன. 16 ஆம் திகதி சிட்னியில் நடைபெறவுள்ள 2 ஆவது அரை இறுதியில் அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதவுள்ளன.  இறுதிப்போட்டி 20 ஆம் திகதி சிட்னியில் நடைபெறள்ளது.


இம்முறை அரை இறுதிக்குத் தெரிவான அணிகள் எதுவும் இதுவரை மகளிர் உலகக் கிண்ணத்தை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்