கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி ஆய்வுகள் இன்று ஆரம்பிக்க திட்டம் Tamillk News

 முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்ரெம்பர்(05) மேற்கொள்ளப்படும் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் கடந்த ஆகஸ்ட் (31) தீர்மானிக்கப்பட்டிருந்தது.

tamillk news


இந் நிலையில் செவ்வாய்கிழமை (5) 03.00 மணியளவில் குறித்த அகழ்வுப் பணிகள் தொடர்பில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அகழ்வுப்பணி தொடர்பான ஆரம்பக்கட்ட ஆய்வுகளும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்த வழக்குடன் தொடர்புடைய சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.எஸ்.நிரஞ்சன் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் செவ்வாய்கிழமை (5) காலை கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



இந் நிலையில் இன்று மாலை 03.00மணிக்கு இந்தவழக்கு தொடர்பில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் ஒரு கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேவேளை தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்டவர்களும் குறித்த இடத்திற்கு வருகைதந்து, அங்கு ஆரம்பகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது - என்றார்.



மேலும் குறித்த கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில், அகழ்வாய்வுகளுக்கான பாதுகாப்பு நிலையங்கள் மற்றும், மலசலகூடம் என்பன அமைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Mullaitivu Tamil News

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்