கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்துக்ககுள் நுழைந்த புலனாய்வாளர்கள்- வேடிக்கை பார்த்த பொலிசார்! Tamillk News

 Mullaitivu Tamil News -கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி முதலாம் நாள் அகழ்வாய்வுப்பணிகள் செப்ரெம்பர் (06) இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது. 

tamillk news


இவ்வாறு இடம்பெற்ற முதலாம் நாள் அகழ்வாய்வுப் பணிகள் முடிவுறுத்தப்பட்டு  அகழ்வாய்விற்கென வருகைதந்த அனைத்துத் தரப்பினரும் வெளியேறி, குறித்த பகுதி பொலிசாரின் ஆளுகையின் கீழ் வந்ததன் பின்னர், மனிதப் புதைகுழி வளாகத்திற்குள் நுழைந்த இராணுவப் புலனாய்வாளர்கள் குறித்த பகுதியை புகைப்படம் எடுத்துள்ளனர். 


ஏற்கனவே இந்த கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்குவிசாரணையின்போது குறித்தபகுதியில் புலனாய்வளார்களின் அச்சுறுத்தல் நிலைமைதொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. 



அகழ்வாய்வின் முதலாம் நாளே இவ்வாறு, பொலிஸ் பாதுகாப்பின் மத்தியிலும் புலனாய்வாளர்களின் அத்துமீறல் செயற்பாடு பதிவாகியிருப்பது, இந்த அகழ்வய்வு தொடர்பிலும், பொலிசாரின் செயற்பாடு தொடர்பிலும் மக்கள்மத்தியில் அதிர்ப்தி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்