வவுனியா மாவட்டத்தில் கலைப் பிரிவில் சாதனை படைத்த மாணவி - Tamillk News - vavuniya news

 

tamillk news

Vavuniya News - வவுனியா மாவட்டத்தில் கலைப் பிரிவில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி ராம்குமார் கவிப்பிரியா முதலாமிடம் பெற்றுள்ளார்.


கடந்த 2022 (2023) ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சைப் பெறுகள் இன்று (04.09) மாலை வெளியாகின.



குறித்த பெறுபேற்றின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி செல்வி ராம்குமார் கவிப்பிரியா தமிழ்,  விவசாய விஞ்ஞானம், புவியியல் ஆகிய பாடங்களில் 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 194 ஆவது இடத்தையும் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். 

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்