தனியார் பேருந்து விபத்தில் 15 பேர் காயம் - tamillk news

 

tamillk news

அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மரதன்கடவல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைத்தவர்கள் மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  குறிப்பிட்டனர்.


இந்த விபத்தில் காயமடைந்த பயணிகளை மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக பொலிஸாருடன் இணைந்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் இணைந்து செயற்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

tamillk news


இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் இரு பாடசாலை மாணவர்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மரதன்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்