Manner news - மன்னார் - முள்ளிக்குளம் வீதியில் இன்று (17) காலை 7:30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து டன் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
முள்ளிக்குளத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் போக்குவரத்து பேரூந்தை ஒன்றை எதிர் திசையில் வந்த டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஏனையோர் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் இன்று (17) காலை 7:30 மணியளவில் முள்ளிக்குளம் ஸீனத் நகர் பகுதியில் நடை பெற்றுள்ளது
இவ் விபத்தில் காயமடைந்தவர் சிலாவத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாவத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனார்.