பியகம - கொட்டுன்ன பகுதியில் கை, கால்கள் மற்றும் தலையின்றி சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சபுகஸ்கந்த காவல்நிலையத்தில் இன்று பிற்பகல் சரணடைந்துள்ளார்.
காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளுக்கமைய, குறித்த சந்தேகநபருக்கு சொந்தமானதென கருதப்படும் மகிழுந்து ஒன்று நுவரெலியா – சந்ததென்ன விகாரைக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 28ம் திகதி 51 வயதுடைய பெண் காணாமல் போனதாக முல்லேரிய காவல்நிலையத்தில் அவரது மகள் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, குறித்த சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Tags:
srilanka



