தந்தை மற்றும் மகள் மீது அசிட் வீச்சுத் தாக்குதல்! பயங்கர சம்பவம் - tamillk news

tamillk news


அசிட் வீச்சுத் தாக்குதலில் தந்தையும் மகளும் காயமடைந்துள்ள சம்பவமொன்று முல்லேரிய, அம்பத்தளை பகுதியில் இன்று (11) காலை இடம்பெற்றுள்ளதாக முல்லேரிய பொலிஸார் தெரிவித்தனர்.


மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகளும் இந்த அமிலத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


வீதியில் நின்றிருந்த ஒருவரால் இந்த அசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.


சம்பவத்தில் காயமடைந்த தந்தை, கொழும்பு கண் வைத்தியசாலையிலும் மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்