புதுக்குடியிருப்பு பகுதியில் கோர விபத்து..! இளைஞன் பரிதாபமாக பலி - tamillk news

 

tamillk news

mullaitivu tamil news - புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.


புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கைவேலி நோக்கி பயணித்த உந்துருளி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கால்வாய் ஒன்றுக்குள் வீழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.


சம்பவத்தில் காயமடைந்த உந்துருளி ஓட்டுனர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.





விபத்தில் உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவர் என காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்