முன்னாள் ஜனாதிபதி அலுவலகத்தில் கிடைத்த பணம் தொடர்பில் தீர்மானம்! tamillk news

 

srilanka tamil news

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியில் இருக்கும் போது அவரது அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 17.85 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.


அது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால், குறித்த விடயம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, கோட்டை நீதிமன்றில் தெரிவித்துள்ளது.


17.85 மில்லியன் ரூபா பணம் 2022 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி அன்று கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்