யாழின் முக்கிய பகுதியில் இளைஞன் மீது வாள்வெட்டு! tamillk news

 

jaffna tamil news

Jaffna tamil news - யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் சிறுப்பிட்டிப் பகுதியில் நேற்றுப் பகல் , முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் ஒருவரை ‘பட்டா’ ரக வாகனத்தில் வந்த நபர்கள் துரத்தி துரத்தி வாளால் வெட்டியுள்ளனர்.


இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இரண்டு பிள்ளைகளின் தந்தையான லக்சன் என்பவர் மீதே வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. நாயன்மார்கட்டைச் சேர்ந்த குறித்த நபர் சிறுப்பிட்டியில் திருமணம் செய்து வசித்து வருகின்றார்.


இந்த நிலையில் முச்சக்கரவண்டியில் பயணித்த இந்த நபரைரை விரட்டிச் சென்று நேற்றுப் பகல் வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.




தப்பியோடிய நபர் சிறுப்பிட்டி வைரவர் கோயிலுக்குள் புகுந்த போதும் அங்கு வைத்தும் அவரை வாளால் வெட்டி விட்டு வன்முறைக் கும்பல் தப்பிச் சென்றுள்ளது. வீதியால் சென்றவர்கள் வாள்வெட்டால் காயமுற்ற இளைஞரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்