ஆசிரியர் தின நிகழ்வின்போது பாடசாலைக்குள் புகுந்த வன்முறை கும்பல் - மாணவர்கள் மீது தாக்குதல்..! tamillk news

 

tamillk news

mullaitivu tamil news - முல்லைத்தீவு வலயத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் நேற்று  திங்கட்கிழமை ஆசிரியர் தின நிகழ்வில் பாடசாலைக்குள் புகுந்த வன்முறை கும்பல் மோதலில் ஈடுபட்டது.


குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,


குறித்த பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் வெளியிலிருந்து வருகை தந்த நபர்கள் பாடசாலையில் அத்து மீறி உள்நுழைந்து  சில மாணவர்களை தாக்கியுள்ளனர்.


இதனால் பாடசாலையில் சிறிது நேரம் பதட்டம் நிலவியது.



  வெளியில் ஏற்பட்ட முரண்பாடு பாடசாலை வரை கொண்டு வரப்பட்டு தாக்குதல் நடாத்தப்படுவதற்கு  காரணமாக அமைந்தது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.



குறித்த சம்பவம் தொடர்பில் புது குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பாடசாலை நிர்வாகம் சமரசமாக செல்வதாக கேட்டதற்கு இணங்க எச்சரிக்கையுடன் சந்தேக நபர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்