திருகோணமலையில் தமிழ் ஆயுத போராட்ட அமைப்பினரின் ஆயுதங்களை தேடி முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தமிழ் ஆயுத போராட்ட அமைப்பினரின் ஆயுதங்கள் குறித்த இடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை சம்பூர் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தில் அகழ்வுப் பணி இன்று (14)இடம் பெற்றது.
மூதூர் நீதிமன்ற பதில் நீதவான் தலைமையில் இவ் அகழ்வுப் பணி திருகோணமலை தடயவியல் பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த பகுதியில் சுமார் 12 அடி தோண்டப்பட்ட நிலையில் ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் மீண்டும் இயந்திரத்தை கொண்டு குறித்த கிடங்கை மூடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
trincomalee tamil news
Tags:
trincomalee



