பொலிஸ் அதிகாரி மீது காரை ஏற்றிய சந்தேகநபருக்கு விளக்கமறியல்! tamillk news

 

tamillk news

கொழும்பு - கறுவாதோட்ட சுற்று வட்டத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் தொடர்பில் கைது செய்யப்பட்டவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


குறித்த சந்தேகநபரை 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்த விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குருந்துவத்தை பொலிஸாரால் 28 வயதான தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.


கறுவாதோட்ட சுற்று வட்டத்திற்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (06) அதிகாலை உயிரிழந்துள்ளார். 




கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் மகன் மற்றும் பொலிஸ் வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர் ஒருவரென தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்