மேஷம்: குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் கைகூடும். சகோதரர்களுடன் இருந்து வந்த பனிப்போர் விலகும். பணியில் திறமையை வெளிப்படுத்துவீர். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்.
ரிஷபம்: வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர். பழைய வாகனம் செலவு வைக்கும்.
மிதுனம்: குழப்பம் நீங்கி தெளிவாக, முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். தொழிலில் இருந்து வந்த அலைச்சல் விலகும். அலுவலக செயல்பாட்டில் நிதானம் தேவை.
சிம்மம்: எடுத்த வேலையை முடித்துக் காட்டுவீர்கள். சொந்த - பந்தங்கள் தேடி வருவார்கள். குடும்பத்தினருடன் நிம்மதி உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி யுடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும்.
துலாம்: முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து லாபம் அதிகரிக்கும்.
கும்பம்: நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை. தாயாருடன் இருந்த மனக்கசப்பு விலகும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு.
மீனம்: வெளியூர் பயணங்கள் உங்களின் ஆதாயத்தை பெருக்கும். கிடப்பில் கிடந்த சில அரசு வேலைகள் இப்போது முடியும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்














