வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஆரம்பிக்கப்பட்ட புதிய வேலைத்திட்டம் ! srilanka tamil news

 srilanka tamil news

tamillk news


ஒரு வாரத்திற்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழி குஞ்சுகள் பன்றிகளுக்கு உணவளிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வருமானத்தை அதிகரிக்கும் புதிய வேலைத்திட்டம்

இத்தகைய சேவல் குஞ்சுகள் ஏனைய தேவைகளுக்கு பயன்படுத்தப்படாமையால் பன்றிகளுக்கு உணவளிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் இறைச்சிக்காக கோழி வளர்ப்பில் ஈடுபடும் பண்ணைகளுக்கு சேவல் குஞ்சுகளை விநியோகம் செய்ய  தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.


வேலையில்லாதவர்களுக்கு சேவல் குஞ்சுகளை இலவசமாக வழங்கி வருமானத்தை அதிகரிக்கும் புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.



இதேவேளை முட்டை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தள 10 அல்லது 20 இலவச பேட்டுக் கோழி குஞ்சுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்