அன்ரன் பாலசிங்கத்தின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! kilinochchi tamil news

kilnochchi news


தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் நினைவாக'வணங்குவோம் வல்லமை சேர்ப்போம்' எனும் தொனிப்பொருளில் நினைவுப் பேருரையும் கருத்தாடல் நிகழ்வும் இன்று(16.12.2023)  இடம்பெற்றது.

ஈழத் தமிழரின் இராஜதந்திரப் பயணத்தில் தேசத்தின் குரல்

'தேசத்தின் குரல்' அரசறிவியல்பள்ளியின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் இன்று காலை(16) நடைபெற்றது.


உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கை கிளையின் தலைவர் அ. சத்தியானந்தம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் தொடக்கவுரையை யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் எஸ். ரகுராம் நிகழ்த்தியதுடன் நினைவுப் பேருரையை 'ஈழத் தமிழரின் இராஜதந்திரப் பயணத்தில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வகிபாகம்' என்ற தலைப்பில் யாழ். பல்கலைக்கழக அரசறிவியல் துறை தலைவர் கே. ரி. கணேசலிங்கம் நிகழ்த்தினார்.




இந்நிகழ்வில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

kilinochchi tamil news





Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்