(vavuniya tamil news -tamillk) நத்தார் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 23கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.
இன்று நத்தார் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக 1004 சிறைகைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.
சிறுகுற்றங்களை புரிந்த கைதிகள்
அதற்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சிறுகுற்றங்களை புரிந்த மற்றும் தண்டப்பணத்தினை செலுத்த முடியாத 23பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில் இன்று விடுவிக்கப்பட்டனர்.
செய்திகளை அறிந்து கொள்வதற்கு WhatsAppல் இணைந்து கொள்ளுங்கள்
Join Now
Tags:
Vavuniya-news



