vavuniya tamil news
(vavuniya tamil news -tamillk) வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் இரு பாடசாலைகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சில பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
பல பொருட்கள் திருடப்பட்டுள்ளது
வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள அல் அக்ஸா வித்தியாலயம் மற்றும் ஆயிசா வித்தியாலயம் என்பவற்றுக்குள் நுழைந்த திருடர்கள் பாடசாலை கதவுகளை உடைத்துள்ளதுடன், பாடசாலையில் இருந்த மோட்டர்கள், மின்விசிகள் என்பவற்றையும் கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகத்தால் பூவரன்குளம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.