பாராளுமன்றத்திற்கு அருகில் பதற்றம்! இன்று காலை முதல் ஆர்ப்பாட்டம்! srilanka tamil news

 

tamillk news



அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களினால் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


இதனால் பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற நுழைவாயில் தடைப்பட்டுள்ளது.


அதிக வருமான வரி விதிப்புக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பொறியியலாளர்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றன.

அப்போது போராட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக தெரியவருகின்றது.


பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.




இதில் மருத்துவம், பொறியியல், வங்கி மற்றும் பல துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்