(srilanka tamil news-tamil lk news) குருநாகல் மாவட்டத்தில் மூன்று குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டு சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற தம்பதியினர் குளியாப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளது.
டீகல்ல, எலத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் அவசர சேவைப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து,
பொலிஸார் குறித்த தம்பதியினரின் கதவு பூட்டப்பட்டிருந்த வீட்டைச் சோதனையிட்ட போது மூன்று குழந்தைகளும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததைக் கண்டுள்ளனர்.
வைத்தியசாலையில்
இந்நிலையில் குறித்த மூன்று குழந்தைகளையும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, வீட்டில் விடப்பட்ட மூன்று பிள்ளைகளும் எட்டு, ஐந்து மற்றும் மூன்று வயதுடையவர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது.
குறித்த தம்பதியினர் வீட்டில் பிஸ்கட் போன்றவற்றை குழந்தைகள் உண்பதற்காக வைத்துவிட்டு மற்றுமொரு குழுவினருடன் புனித யாத்திரை சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் யாத்திரை முடிந்தவுடன் அந்த தம்பதியினர் உடனடியாக கைது செய்யப்பட்டதுடன்,
குழந்தைகளின் பாதுகாப்பு கருதி வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



