(srilanka tamil news-tamil lk news) குடாவெல்ல கடற்கரையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டநிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில் ஏனைய இரு இளைஞர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், மற்றுமொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இளைஞர்கள் மூவரும் நீராடிக்கொண்டிருந்தபோது அலையில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
srilanka



