இன்றைய ராசிபலன் 29-01-2024

 

tamil lk news

மேஷம்: தடைபட்ட காரியங்கள் சுமுகமாக முடியும். சொந்த பந்தங்கள் மத்தியில் மரியாதை கூடும். தொழில்ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகளால் நிம்மதி உண்டு.


ரிஷபம்: சாதுர்யமாக செயல்படுவீர்கள். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் அதிகாரிகள் உடனான மனக் கசப்புகள் நீங்கும். பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள்.

மிதுனம்: பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அலுவலக பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவு வரும்.


கடகம்: உங்கள் பேச்சில் நம்பிக்கை பிறக்கும். குடும்பத்தினரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய நட்பு மலரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வாகன பழுது நீங்கும்.


சிம்மம்: உங்களை சுற்றி இருப்பவர்களால் இருந்த தொல்லைகள் அகலும். வெளியூர் பயணத்தால் ஆதாயம், அனுகூலம் உண்டு. பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள்.


கன்னி: தேவையற்ற மன இறுக்கம், குழப்பம் வந்துபோகும். நீண்டதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வழக்கு விவகாரத்தில் நன்கு ஆலோசித்து செயல்படுங்கள். எதிலும் நிதானம் தேவை.

துலாம்: எதிர்காலம் பற்றிய பயம் விலகும். பிள்ளைகளின் செயல்பாடுகளை கண்காணிப்பது அவசியம். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் வேலைச் சுமை குறையும்.


விருச்சிகம்: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணப் புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். ஆன்மிகத்தில் மனம் செல்லும்.


தனுசு: பழைய நண்பர்களால் உதவி உண்டு. குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பழைய கடன்கள், பாக்கிகள் வசூலாகும்.


மகரம்:ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து நடப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்சினை சுமுகமாக தீரும். அதிகாரிகளின் அன்பை பெறுவீர்கள். உடல்நலம் சீராகும்.

கும்பம்: திட்டமிட்டது ஒன்றாக, நடப்பது வேறாக இருக்கும். நன்றி மறந்தவர்களை நினைத்து வருத்தம் அடைவீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். அலைச்சல் அதிகரிக்கும்.


மீனம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்