யாழில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்! jaffna tamil news

(jaffna tamil news-tamil lk news)  யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் கடந்த சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

tamil lk news

கடலின் சீற்றத்தினால்

இந்நிலையில்,  வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் இன்று (28.01.2024) காலை மூன்று ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

எனினும், கடலின் சீற்றத்தினால் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் இவ்வாறு உயிரிழந்து கரையொதுங்கலாம் என அப்பகுதி கடற்றொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இருப்பினும். ஆமைகளை பிடிப்பதும் இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதமாகக் காணப்படுகின்றது


இதனால். கரையொதுங்கிய ஆமைகள் கைவிடப்பட்ட நிலையிலும் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்