சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! tamil lk news

 சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

tamil lk news


நிலநடுக்கம் நேற்று (30.1.2024) ஜின்ஜியாங் உய்கா் - அக்கி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது.


இந்நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.7 அலகுகளாகப் பதிவாகி உள்ளது.

பூமிக்குக் கீழே 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு 2 வாகனங்களில் 10 உறுப்பினா்கள் அடங்கிய மீட்புக் குழு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பில் தகவல் வெளியாக வில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்