(srilanka tamil news) நாட்டின் தொழுநோயின் தாக்கம் அதிகரித்து வருவதுடன் தற்போது அதிகளவானன மக்கள் மத்தியில் தொழுநோய் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை உலக தொழுநோய் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
மேலும், இந்த வருடம் தொழுநோயை தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில் தொழுநோயாளர் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
தொழுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு
இலங்கையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
மேலும், சிறுவர்களிடையே பரவும் தொழுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
srilanka



