கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டாவளை பகுதியில் தனியார் பேருந்தொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்றைய தினம் (27.01.2024) இடம்பெற்றுள்ளது.
வீதியைவிட்டு விலகி
குறித்த தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிச்சென்ற போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்தினை உடைத்துக்கொண்டு கால்வாயில் விழுந்துள்ளது.
இந்த விபத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



