ரணில் தொடர்பில் பரபரப்பு தகவலை வெளியிட்ட மகிந்த! tamil lk news

 நிறைவேற்று ஜனாதிபதி பதவியை தாம் அனுபவித்து முடித்து விட்டதாகவும் அதனை இல்லாது ஒழிப்பது நல்ல விடயம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


நாட்டில் தற்போது அரசியல் சூழ்நிலை நன்றாக உள்ளது.  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. நான் அதனை அனுபவித்து முடித்துவிட்டேன்.

tamil lk news


ஆனால் அவர்கள் அதை இரத்து செய்தால் நல்லது. இன்று முழு நாடும் அதை ஒழிக்கச் சொல்கிறது.

தேர்தலை ஒத்திவைக்கும் பொறியாக இந்த விடயம் உள்ளதென ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, அப்படியும் இருக்கலாம் ரணிலை நாங்கள் நன்கு அறிவோம் என மகிந்த பதிலளித்துள்ளார்.


எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம். ஜனாதிபதி தேர்தலில் கூட எமது வேட்பாளர் வெற்றி பெறுவார்.


பொதுத் தேர்தலில் எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என மகிந்த மேலும் தெரிவித்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்