காசாவில் பதற்றமான சூழ்நிலை வலுப்பெற்றுவரும் நிலையில், ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
ஹமாஸ் இராணுவத்தின் முக்கியத் தலைவரான ஒமர் அல்-ஃபயேத் என்பவரைக் கைது செய்துள்ளதாக இஸ்ரேல் எக்ஸ் ( x ) தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், சர்வதேச மனிதஉரிமை ஆணையகம் ஐ.நா சபை என பல்வேறு அமைப்புக்கள் மற்றும் உலக நாடுகள் கடுமையான பல கண்டனங்களையும் வெளியிட்டு வந்தாலும் இஸ்ரேல் தனது போர் கொள்கையை நிலையாக கொண்டு போரை தொடர்ந்து வருகிறது.
இஸ்ரேலின் பாதுகாப்புப்படை
இந்நிலையில் குறித்த கைது தொடர்பில் இஸ்ரேல் இராணுவம் தெரிவிக்கையில், காசாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் பொலிஸ் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்புப்படை இணைந்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், நடவடிக்கையின்போது அடையாளம் தெரியாதநபர் நடத்திய தாக்குதலில் இரண்டு இஸ்ரேல் வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |