இலங்கையில் பூமிக்கு அடியில் புதைந்து போன நகரம் கண்டுபிடிப்பு.....! tamil lk news

srilanka tamil news-tamil lk news


 வரலாற்றுச் சிறப்புமிக்க பொலன்னறுவையில் மேலும் பல புராதன நிர்மாணங்களின் எச்சங்கள் பூமிக்கடியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இலங்கை வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றின் அடித்தளத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த கண்டுபிடிப்புகள் உள்ளதென கூறப்படுகின்றது.


அவுஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பூமியை பார்க்கக்கூடிய பிரத்யேக ரேடார் இயந்திரம் மூலம் பூமிக்குள் சுமார் 5 மீட்டர் தொலைவில் உள்ள இந்த தகவலை கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

பொலன்னறுவையின் வரலாறு தொடர்பான மேலும் மறைக்கப்பட்ட தகவல்களைக் கண்டறிய, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று பொலன்னறுவை தொல்பொருள் தளத்திற்கு சொந்தமானவைகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

GPRS எனப்படும் தனித்துவமான இயந்திரத்தைப் பயன்படுத்தி இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது, மேலும் அந்த இயந்திரம் பூமியை சுமார் ஐந்து மீட்டர் ஆழத்தில் ஆராயும் திறன் கொண்டது. புராதன நகரமான பொலன்னறுவை அடிப்படையில் பல முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது,


மேலும் உள் நகரம் பழைய பொலன்னறுவையின் மையமாகக் கருதப்படுகிறது. ரேடார் அப்பகுதியை ஆய்வு செய்தது. களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் பிரஷாந்த குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில்,

பொலன்னறுவையில் பூமிக்கடியில் புதைந்துள்ள பழங்கால கட்டிடங்களின் இடிபாடுகளை நிலத்தடி ஊடுருவும் ரேடார் மூலம் பெறப்பட்ட சமிக்ஞை மூலம் வெளிப்படுத்த முடிந்துள்ளது.

இதிலிருந்து அதன் அமைப்புகளை நன்கு புரிந்து கொள்ள முடியும்.இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பழைய கட்டிடங்கள், குளங்கள் மற்றும் எந்த அகழ்வாராய்ச்சி விடயங்களையும் வேறுபடுத்தி அறிய முடியும்.


தொடர்ந்து சரியான முறையில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டால் புதைந்த நகரம் மற்றும் அங்கு வாழந்த மன்னர்கள் தொடர்பில் அறிந்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்