வெடுக்குநாறிமலையில் பொலிசாரின் தாக்குதலால் உடல்நிலை பாதிப்பு;சட்டவைத்திய பரிசோதனை!

 வவுனியா - வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட 8 பேரும் சட்டவைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு இன்று அழைத்து செல்லப்பட்டனர்.


வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்ட 8 பேர் நெடுங்கேணி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டனர்.

vauniya news


குறித்த சம்பபவ தினத்தன்று அவர்கள் மீது பொலிசார் தாக்குதல் நடத்தியமையால் அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சார்பாக ஆயராகிய சட்டத்தரணிகள் தெரிவித்தனர். 


இதனையடுத்து குறித்த 8 பேரையும் சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிறுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.


இதனையடுத்து குறித்த 8 பேரும் சிறைச்சாலைகள் திணைக்களத்தால் இன்றையதினம் வவுனியா சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


இதேவளை  இன்று விடுமுறை தினம் என்பதால் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் இல்லை. இதனால் வைத்தியசாலையில் வைத்து அவர்களுக்கான மாற்று ஆடைகள் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 


எனினும் சிறைக்காவலர்கள் அதற்கு அனுமதி வழங்கியிருக்கவில்லை. 


இதனால் கடந்த இருதினங்களாக அவர்கள் கைதுசெய்யப்படும் போது அணிந்திருந்த ஆடைகளே அணிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்