கொழும்பு ஆர்மர் வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்று அடையாளம் தெரியாத சிலரால் நேற்று(03) நள்ளிரவு தாக்கப்பட்டு சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
திடீரென உணவகத்திற்குள் நுழைந்த சிலர் வாள்கள் மற்றும் பொல்லுகளால் உணவகத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், ஊழியர்களையும் காயப்படுத்தியுள்ளனர்.
உணவகத்திற்குள் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று நுழைந்த விதம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
அந்த கும்பல் உணவக உடைமைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில், அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் பயத்துடன் வெளியே செல்வதும் சிசிரிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
குறித்த உணவகத்தை பயன்படுத்துவது தொடர்பாக உரிமையாளருக்கும் குத்தகைதாரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
srilanka



