வீடொன்றில் இடம்பெற்ற விருந்து: இளம் யுவதிகள் உட்பட 19 பேர் கைது....! tamil lk news

 

tamillk news

ஹோமாகம - மாகம்மன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 19 பேரையும், 08 யுவதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கஹதுடுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மாகம்மன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தில் கலந்து கொண்ட இந்த குழுவினரை சுற்றிவளைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.


சந்தேகநபர்கள் 3 பேரிடம் இருந்து ஹாஷிஸ் போதைப்பொருளும், மேலும் மூன்று சந்தேகநபர்களிடம் இருந்த போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சந்தேகநபர்கள் பொலன்னறுவை, தெஹியத்தகண்டிய, காலி, கண்டி மற்றும் தியத்தலாவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்