வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரும் கைவிலங்குகளுடன் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிக்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 08 ஆம் திகதி வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் மகாசிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக சட்டத்தரணிகள் கடந்த சனிக்கிழமை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.
இதனையடுத்து நேற்று (10.03) ஞாயிற்றுக்கிழமை குறித்த 8 பேரையும் மன்றின் உத்தரவுக்கமைய வவுனியா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அழைத்து சென்றுள்ளனர்.
இதன்போது குறித்த 8 பேரினதும் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கைவிலங்குடன் அவர்கள் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |