மாத்தறையில் உயிரிழந்த தனது தந்தையின் ஞாபகார்த்தமாக 13 வயது சிறுவன் உருவாக்கிய வெசாக் மின்குமிழ் பந்தல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குறித்த அலங்கார பந்தலானது மாத்தறை புனித தோமஸ் கல்லுரியில் 8ஆம் தரத்தில் கல்வி பயிலும் வெனுஜ தெனுவான் சேனாநாயக்க என்ற மாணவனாலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
வெனுஜவின் தனது தந்தையும் பாட்டனாரும் மின் பொறியியலாளர்கள் என்பதோடு இதன்மூலம் இருவரிடமும் மின் தொழில்நுட்ப வேலைகளை சிறு வயதிலிருந்தே கற்றுக் கொண்டுள்ளார்.
அத்துடன் அவர்கள் வெசாக் தினங்களில் மின்குமிழ் பந்தல்களை அமைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தந்தையின் அரவணைப்பை 3 மாதங்களுக்கு முன் இழந்துள்ள வெனுஜ என்றாவது ஒருநாள் நீ அதிசிறந்தவனாக உருவாக வேண்டும் எனும் புத்திமதியை கூறியே தந்தை வளர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே உயிரிழந்த தனது தந்தையின் இந்த வார்த்தைக்கு உயிரூட்டி வெனுஜ 5000 மின்குமிழ்கள் கொண்ட வெசாக் பந்தலொன்றை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் விமானியாக வேண்டும் என்பதே தனது ஆசை என வெனுஜ குறிப்பிட்டுள்ளார்.
(Srilanka Tamil News.....)




